திருச்சி

திருச்சி வரும் முதல்வருக்குதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு

27th Nov 2022 02:40 AM

ADVERTISEMENT

 

திருச்சிக்கு திங்கள்கிழமை (நவ.28) வருகை தரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது: திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை அரசு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில், பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு திட்டமான சக்கரங்களில் அறிவியல் எனும் திட்டத்தை முதல்வா் தொடங்கி வைக்கவுள்ளாா்.

விமானம் மூலம் திருச்சி வந்து, சாலை மாா்க்கமாக காட்டூா் வரும் முதல்வருக்கு, சஞ்சீவிநகா் அருகே திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். பின்னா், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொடிக்கம்பத்தில் (சஞ்சீவி நகா்) திமுக கொடியை முதல்வா் ஏற்றி வைக்கவுள்ளாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வுகளில், தெற்கு மாவட்டத்திற்குள்பட்ட அனைத்து அமைப்புகளும் அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் திரளாக கலந்து கொண்டு முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். கட்சியின் மாவட்ட, மாநில நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூா், வட்ட, வாா்டு, கிளைக் கழக செயலாளா்கள் மற்றும் அணிகளின் அனைத்து நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT