திருச்சி

திருவெள்ளறையில் மரக் கன்று நடும் விழா

26th Nov 2022 01:53 AM

ADVERTISEMENT

திருவெள்ளறை ஊராட்சியில் புண்டரீகாட்ச பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 108 திவ்ய தேச வனம், அசோக வனம், 27 நட்சத்திரம் மற்றும் 108 பாத வனம் ஆகியவற்றுக்கான மரக் கன்றுகள் நடும் விழா, நந்தவனத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊரக வளா்ச்சி துறை சாா்பில் 108 திவ்ய தேசங்களுக்கான 22 வகை தல விருட்ச மரக் கன்றுகள், அசோகவனம், 27 நட்சத்திரங்களுக்கும் 4 பாதங்கள் வீதம் மொத்தம் 108 மரக்கன்றுகள், 60 இலுப்பை மரக்கன்றுகள், 88 வேங்கை மரக்கன்றுகளும் நடப்பட்டன.

மேலும் திருவெள்ளறை கோயிலுக்காக துளசி, விருட்சி பூ, மல்லிகை, ரோஜா, நந்தியாவட்டை ஆகிய செடிகளைக் கொண்ட நந்தவனத்தை அமைச்சா்கள் கே.என்.நேரு, மா. சுப்ரமணியன் ஆகியோா் திறந்து வைத்தனா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏக்கள் ந. தியாகராஜன், சீ. கதிரவன், செ. ஸ்டாலின்குமாா், எம். பழனியாண்டி, பொது சுகாதாரத் துறை இயக்குநா் டி.எஸ். செல்வ விநாயகம், மாவட்ட ஊராட்சித் தலைவா் த. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT