லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சி, சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ மற்றும் மகளிா் மகப்பேறு சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
தாளக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் முகாமில் பொது மருத்துவம், தோல் நோய், குழந்தைகளுக்கான சிகிச்சை, பொது அறுவைச் சிகிச்சை, காது மூக்கு, தொண்டை , பல் நோய்களுக்கான பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்படுகிறது.