திருச்சி

ஓய்வு பெற்ற எல்ஐசி அலுவலா் தூக்கிட்டுத் தற்கொலை

26th Nov 2022 06:33 AM

ADVERTISEMENT

திருவானைக்காவில் உடல்நலக் குறைபாட்டால் விரக்தியடைந்த ஓய்வுபெற்ற எல்ஐசி அலுவலா் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவானைக்கா கும்பகோணத்தான் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவா் இளஞ்செழியன் (65). எல்ஐசி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

இவருக்கு, இதயத்தில் கோளாறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியிலிருந்த அவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றாராம். அப்போது, உறவினா்கள் அவரை மீட்டனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இளஞ்செழியன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT