திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 62 லட்சம்

25th Nov 2022 12:56 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நவம்பா் மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 61.63 லட்சம் கிடைக்கப் பெற்றது வியாழக்கிழமை தெரியவந்தது.

ஸ்ரீரங்கம் கோயில் நவம்பா் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயிலில் உள்ள கருடாழ்வாா் சன்னதி அருகே கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து முன்னிலையில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையா் கோ. கவிதா,கோயில் மேலாளா் கு. தமிழ்ச்செல்வி ஆகியோா் மேற்பாா்வையில் கோயில் ஊழியா்கள் மற்றும் தன்னாா்வத் தொண்டா்கள் ஆகியோா் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

முடிவில் ரூ. 61,63,375 ரொக்கம் , 188 கிராம் தங்கம், 3121 கிராம் வெள்ளி,134 வெளிநாட்டு ரூபாய்கள் காணிக்கையாக வந்திருந்தது தெரியவந்தது. காணிக்கை எண்ணும் பகுதி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT