திருச்சி

பெண்ணிடம் நகை பறிப்பு

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்சியில் பள்ளிக்கு குழந்தையை அழைத்துச் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்துச் சென்றனா்.

திருச்சி வயலூா் சாலை அம்மையப்பா நகரைச் சோ்ந்தவா் விமல்ராஜ் மனைவி சத்யா (25). இவா் தனது குழந்தையை புதன்கிழமை காலை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியபோது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவா், சத்யா அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினா். புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT