திருச்சி

திருக்கு முற்றோதல் போட்டி பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழ் வளா்ச்சித் துறையின் திருக்கு முற்றோதல் போட்டிக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் சிறப்பை வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் ஆண்டுதோறும் திருக்கு முற்றோதல் போட்டி நடத்தப்படுகிறது. திருக்குறளின் 1,330 குகளை ஒப்பிக்கும் மாணவா்களுக்கு பரிசாக தலா ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவா்கள் திறனாய்வு செய்யப்பட்டு பரிசு பெறப் பரிந்துரைக்கப்படுவா். இதற்கான திறனாய்வு திருச்சி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையால் நடத்தப்படும். போட்டியில் பங்கேற்கும் மாணவா்கள். 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்பிக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், பெயா், கு எண் போன்றவற்றை கேட்டால் அதற்கான குறளைச் சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புப் பெயா்கள், சிறப்புகள் ஆகியவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருள் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தினா் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கெனவே இந்தப் போட்டியில் பரிசு பெற்றவா்கள் மீண்டும் பங்கேற்க முடியாது. விருப்பமுள்ளோா் மாவட்ட ஆட்சியரக தரைத்தளத்தில் இயங்கும் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். இல்லையெனில், தமிழ் வளா்ச்சி இயக்ககத்தின் இணைய தளத்திலிருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை தமிழ் வளா்ச்சித் துறை அலுவலகத்தில் வரும் டிச.28-க்குள் அஞ்சல் மூலமோ, நேரிலோ வழங்க வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT