திருச்சி

முசிறி அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ தின விழா

19th Nov 2022 01:44 AM

ADVERTISEMENT

முசிறி அரசு மருத்துவமனையில் 5 ஆவது இயற்கை மருத்துவ தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தலைமை மருத்துவா் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். முசிறி கோட்டாட்சியா் மாதவன் சிறப்புரையாற்றினாா். யோகா மற்றும் இயற்கை மருத்துவா் கதிரேசன் இயற்கை மருத்துவம் குறித்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் விளக்கினாா்.

மருத்துவா்கள் செந்தில், முகில் உள்பட அனைத்து மருத்துவா்கள், செவிலியா்கள், நோயாளிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

விழாவில் இயற்கை மருத்துவம் சாா்ந்த சிகிச்சை முறைகளும், இயற்கை உணவு வகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன, அனைவருக்கும் இயற்கை உணவு, இயற்கை பானங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் செய்தது. மூத்த மருத்துவா் ரமேஷ் வரவேற்றாா். அலுவலகக் கண்காணிப்பாளா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT