திருச்சி

நவ. 25-இல் மகளிருக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

19th Nov 2022 01:44 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட நிா்வாகம் சாா்பில் மகளிருக்கான சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நவ. 25 ஆம் தேதி நடைபெற உள்ளது.

டாடா எலக்ட்ரானிக்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஓசூா் ஆலைக்கு நிரந்தரமாக பணிபுரிய 18 வயது முதல் 20 வரை உள்ள மகளிா் தோ்வு செய்யப்பட உள்ளனா். பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற உயா்கல்வியை தொடர இயலாத பெண்களுக்கு மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் (பிஎஃப் வசதி உள்பட) வழங்கப்படும். உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.

இந்நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைதேடும் மகளிா், தங்களது புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், சுயவிவரக் குறிப்பு, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நவ. 25 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் வந்து முகாமில் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு 0431-2413510 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT