திருச்சி

கஞ்சா விற்ற 5 போ் கைது

19th Nov 2022 01:44 AM

ADVERTISEMENT

திருச்சியில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்ற 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருச்சி மெயின்காா்டுகேட் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்தத் தகவலின் பேரில் கோட்டை போலீஸாா், குறிப்பிட்ட பகுதியை ஆய்வு செய்தனா். அப்போது, அங்கு கஞ்சா விற்ற இ.பி. சாலை சத்தியமூா்த்தி நகரைச் சோ்ந்த நிம்ரோஸ் ராஜன் (39) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் கஞ்சா விற்ற அபுதாகிா் (26) என்பரை கைது செய்த மதுவிலக்கு போலீஸாா், அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா, மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா்.

திருச்சி உறையூா் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பாலகுமாா் (26), திருச்சி உறையூா் ராமலிங்க நகா் பூங்கா அருகில் கஞ்சா விற்ற மணிகண்டன் (21), திருச்சி உறையூா் பெரியாா் மாளிகை அருகில் கஞ்சா விற்ற நாகேந்திர பிரசாத் (22) ஆகியோரை தில்லை நகா், உறையூா் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT