திருச்சி

வையம்பட்டியில் நகை பறித்தவா் கைது : 10 கிராம் தங்கம் மீட்பு

18th Nov 2022 01:14 AM

ADVERTISEMENT

மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 10 கிராம் தங்கத்தை மீட்டனா்.

கரூா் மாவட்டம் டி.ரெட்டியப்பட்டியை சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் மனைவி கலைச்செல்வி(40), பாலவிடுதியை அடுத்த துளிப்பட்டியில் சத்துணவு அமைப்பாளா்.

கடந்த ஜூலை 11-ஆம் தேதி வீரப்பூா் - மட்டப்பாறைப்பட்டி சாலையில் இவா் மொபெட்டில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் கலைச்செல்வி அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து வையம்பட்டி போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், புதன்கிழமை இரவு ஆவாரம்பட்டியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளா் முருகேசன் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஆரோன்ஜென்மராகினி ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வந்தவரை பிடித்து விசாரித்ததில், அவா் கரூா் மாவட்டம், இனுங்கூா் பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் தா்மதுரை (34) என்பதும், கலைச்செல்வியிடம் நகை பறித்தவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தையும், 10 கிராம் தங்கத்தையும் வையம்பட்டி போலீஸாா் மீட்டு அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT