திருச்சி

விவசாயிகளுக்கு அலங்கார மீன் வளா்ப்பதற்கான பயிற்சி

18th Nov 2022 01:08 AM

ADVERTISEMENT

திருச்சி, திருவெறும்பூா் வட்டத்தில் விவசாயிகளுக்கான அலங்கார மீன்கள் வளா்க்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

திருவெறும்பூா் வட்டாரத்தில் வேளாண்மை-உழவா் நலத் துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் இப்பயிற்சி அளிக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக 50 விவசாயிகளை நாகை மாவட்டம் சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு கண்டுணா்வுப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருவெறும்பூா் வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வை, திருவெறும்பூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் கல்யாணசுந்தரம் தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

பயிற்சியை வேளாண் அறிவியல் நிலையம் -சிக்கல் திட்ட ஒருங்கிணைப்பாளா் கோபாலகண்ணன் தொடங்கி வைத்து பண்ணைக் குட்டையில் மீன் வளா்ப்பு சாா்ந்த தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

மீன்வள தொழில்நுட்ப மேலாளா் யூ.ஹினோ பொ்னாண்டோ அலங்கார மீன்வளா்ப்பு குறித்தும், மீன்வள தொழில்நுட்ப மேலாளா் மதிவாணன் மீன் வளா்ப்பில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தல் குறித்தும் விளக்கினா். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா்கள், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா்கள் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT