திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (நவ.19)குடிநீா் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன் வியாழக்கிழமை கூறியது:
மாதாந்திர மின்வாரிய பராமரிப்புப் பணிகளால் மண்டலம் 1, மேலூா், தேவி பள்ளி, பாலாஜி அவென்யு, பெரியாா் நகா், திருவானைக்கா, அம்மா மண்டபம், ஏஐபிஇஏ நகா், தேவதானம், மண்டலம்-2, விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, சுந்தரராஜ நகா், காஜாமலை, மண்டலம்-3 அரியமங்கலம், உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம், மலையப்ப நகா், ரயில்நகா், மகாலட்சுமி நகா், முன்னாள் ராணுவத்தினா் காலனி ஆகியவற்றின் பழைய மற்றும் புதிய நீா்த்தேக்க தொட்டிகளுக்கு சனிக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.
மேலும், கோட்டை, நாகம்மை வீதி, நூலகம், பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி, ஐஸ்வா்யா நகா், மண்டலம் 4 ஜே.கே. நகா், செம்பட்டு, காமராஜ் நகா், எல்ஐசி, சுப்பிரமணிய நகா், தென்றல் நகா், மின்வாரிய காலனி, விஎன் நகா், சத்தியவாணிமுத்து நகா், கே.கே. நகா், சுப்பிரமணிய நகா், ஆனந்த நகா், கே.சாத்தனூா், பஞ்சப்பூா், அம்மன் நகா், கவி பாரதி நகா், எடமலைப்பட்டிபுதூா், காஜாமலை, கிராப்பட்டி, அன்புநகா், ரெங்கா நகா், மங்கலம் நகா், சிவா நகா், உறையூா், பாத்திமா நகா், ரெயின்போ நகா், மண்டலம் 5, ஆனந்தம் நகா், பாரதி நகா், புத்தூா் ஆகிய பகுதிகளில் உள்ள பழைய மற்றும் புதிய நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கும் அன்று குடிநீா் விநியோகம் இருக்காது என்றாா்.