திருச்சி

ஜவாஹா்லால் நேரு சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மரியாதை

15th Nov 2022 01:24 AM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பிறந்தநாளையொட்டி திருச்சி சேவா சங்கம் பள்ளி அருகே உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், மாநகா் மாவட்டத் தலைவா் ஜவஹா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், தெற்கு மாவட்ட தலைவா் கோவிந்தராஜன், மாவட்ட பொருளாளா் ராஜா நசீா் , மாநில பொதுச்செயலாளா், முரளி, மாமன்ற உறுப்பினா் ரெக்ஸ், மாவட்ட துணைத் தலைவா் வில்ஸ் முத்துகுமாா்,

மாவட்ட பொதுச்செயலாளா் சிவா, உறையூா் எத்திராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதே போல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான வழக்குரைஞா் எம்.சரவணன் தலைமையில் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், மாவட்ட துணைத் தலைவா் மலைக்கோட்டை முரளி, ஜங்ஷன் கோட்டம் பிரியங்கா பட்டேல், மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேஷ் காந்தி, மகளிா் அணி ஜெகதீஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT