திருச்சி

எல். அபிஷேகபுரத்தில் இன்று மின்தடை

15th Nov 2022 01:20 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே எல். அபிஷேகபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.15) மின்விநியோகம் இருக்காது என லால்குடி மின்வாரிய செயற்பொறியாளா் கே. அன்புச் செல்வன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: லால்குடி அருகே எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.15 )மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே, லால்குடி ஏ.கே. நகா், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகா், பச்சனபுரம், உமா்நகா், காமராஜ் நகா், பாலாஜி நகா், ஆங்கரை மலையப்பபுரம், பச்சாம்பேட்டை, மயிலரங்கம், பெரியவா்சீலி , கூகூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT