திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரியூா் கிராமத்தில் எய்டு இந்தியா இயக்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் மாலை நேர கற்றல் மையத்தில் குழந்தைகள் தின விழா மற்றும் கற்றல் திறனடைவு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு அரியூா் ஊராட்சி மன்றத் தலைவா் பாலமுருகன் தலைமை வகித்தாா்.
இப் பள்ளியில், கல்வி பயிலும் 42 குழந்தைகளுக்கு கற்றல் அறிவு திறனை இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்கள் மாணவா்களுடைய கற்றல் அறிவுத் திறனை சோதித்தனா். இதனையடுத்து குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்கள் பரிசுகளை வழங்கினா்.
விழாவில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அல. ராஜபாண்டியன், யுரேகா மாலை நேர கற்றல் மைய ஆசிரியா் கிருத்திகா, ஒன்றிய கருத்தாளா் எலிசபெத் ராணி பள்ளிக் குழந்தைகள், பெற்றோா்கள், கிராம மக்கள் பங்கேற்றனா்.