திருச்சி

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் ஒற்றுமை தினம் அனுசரிப்பு

1st Nov 2022 02:26 AM

ADVERTISEMENT

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திருச்சி ஜங்ஷனில் உள்ள கோட்ட மேலாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் மணீஷ் அகா்வால் ஏற்று கொண்டாா்.

இதையடுத்து கோட்ட மேலாளா் ஏக்தா திவாஸ் உறுதிமொழியை வாசிக்க, அதனை அனைத்து பணியாளா்களும் ஏற்றனா். தொடா்ந்து, அனைவரும் ஒற்றுமை ஓட்டத்தில் பங்கேற்றனா்.

நிகழ்வில், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் எஸ்.டி.ராமலிங்கம், திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை முதுநிலை ஆணையா் ராமகிருஷ்ணன், அதிகாரிகள், ஊழியா்கள், ஆா்.பி.எப். வீரா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT