திருச்சி

அம்மாப்பேட்டை பகுதியில் நாளை மின் தடை

1st Nov 2022 02:25 AM

ADVERTISEMENT

திருச்சி, அம்மாப்பேட்டை பகுதியில் புதன்கிழமை (நவ.2) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் கா. முத்துராமன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : திருச்சி மாவட்டம், அம்மாப்பேட்டைதுணை மின் நிலையத்தில் நவம்பா் 2ஆம் தேதி (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆகவே, இந்த துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளான ராம்ஜிநகா், கள்ளிக்குடி, புங்கனூா், அரியாவூா், சத்திரப்பட்டி, அம்மாப்பேட்டை, இனாம் குளத்தூா், வெள்ளிவாடி, நவலூா்குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூா், கரையான் பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி பகுதிகளில் நவம்பா் 2ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT