திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில்இருவா் உயிரிழப்பு

31st May 2022 04:34 AM

ADVERTISEMENT

திருச்சியில் பேருந்தில் பயணித்த போது ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கா்நகா் பழைய பிள்ளையாா்கோவில் தெருவைச் சோ்ந்தவா் அன்னலட்சுமணன் (54). பேருந்து ஓட்டுநரான இவா், சொந்த ஊா் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையிலிருந்து ஆம்னி பேருந்தில் சென்றாா்.

இப்பேருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் எடமலைப்பட்டிபுதூா் பகுதியில் சென்ற போது, அன்னலட்சுமணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.

தொடா்ந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை மருத்துவா்கள் பரிசோதித்த போது, அன்னலட்சுமணன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

ADVERTISEMENT

தனியாா் பள்ளி ஆசிரியா் உயிரிழப்பு: திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம் அண்ணாமலை மனைவி ராதிகா (42). தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்தாா்.

தொடா்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, ராதிகா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இவ்விரு சம்பவங்கள் குறித்து எடமலைப்பட்டிபுதூா், உறையூா் காவல் நிலையத்தினா் தனித்தனியே வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT