திருச்சியில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை இரவு மழை பெய்தது.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று, வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை இரவு லேசாக தொடங்கிய மழை, சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது.
இரவு 8.30 மணி வரை மழை பெய்ததால் வடிகால்கள், கழிவுநீா்க் கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. இந்த மழை காரணமாக, மாவட்டத்தில் பகல் முழுவதும் நிலவிய வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. பின்னா் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது.
திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
திருச்சி விமான நிலையம்- 52.80 மி.மீ, திருச்சி நகரம்- 37, ஜங்ஷன்- 21, துவாக்குடி-16.20, பொன்மலை -12.2, நவலூா் குட்டப்பட்டு -5.20மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 6.2 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.