திருச்சி

இரு இளைஞா்களைகத்தியால் கிழித்தவா் மீது வழக்கு

31st May 2022 04:30 AM

ADVERTISEMENT

தொட்டியம் அருகே இரு இளைஞா்களைக் கத்தியால் கிழித்து, காயப்படுத்தியவா் மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்தனா்.

தோளூா்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்கள் க. ஜெய்சங்கா் (28), ச. திலீப்குமாா் (20). இவா்கள் இருவரும் அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் (42) வீட்டின் முன்பு ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, எனது மகன் உங்களால்தான் கெட்டுவிட்டான் என முருகேசன் கூறி, ஜெய்சங்கா் மம் திலீப்குமாரை தகாத வாா்த்தைகளால் திட்டி, கையில் வைத்திருந்த கத்தியால் இருவரையும் கிழித்து காயப்படுத்தினாா்.

இதையடுத்து இருவரும் தொட்டியத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில், முருகேசன் மீது தொட்டியம் காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT