குடும்பச் சொத்துகளில் திருநங்கைகளுக்கு சமஉரிமை அளிக்க வேண்டும் என முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலனிடம் திருநங்கைகளுக்காக இயங்கும் அறக்கட்டளைத் தலைவா் கஜோல் அளித்த மனு:
அரசு மூலம் மாவட்டந்தோறும் திருநங்கைகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். தமிழகம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான திருநங்கைகளுக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்.
திருநங்கை என்ற காரணத்தால், குடும்பத்திலிருந்து விரட்டியடிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே திருநங்கைகளுக்கு அவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள, குடும்பச்சொத்தில் சம உரிமை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.
ADVERTISEMENT