திருச்சி

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்தெற்கு மாவட்ட திமுகவில்தீா்மானம் நிறைவேற்றம்

31st May 2022 04:32 AM

ADVERTISEMENT

திமுக இளைஞரணிச் செயலரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று, திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தாா்.

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாளையொட்டி, மாவட்ட அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடுவது, கட்சிப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சிறப்புத் தீா்மானமாக திமுக இளைஞரணிச் செயலரும்,

ADVERTISEMENT

சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமென ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் இனிகோ இருதயராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினா் கே.என்.சேகரன், மாவட்ட நிா்வாகிகள்

கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன்,  செந்தில் மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள்,

ஒன்றிய, நகர, பேரூா், பகுதிக் கழகச் செயலா்கள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளா்கள், ஒன்றியக் குழுத்தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT