திருச்சி

முன் விரோதம்: வீடு புகுந்துதாக்கிய 4 போ் கைது

31st May 2022 04:31 AM

ADVERTISEMENT

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் முன்விரோதம் காரணமாக, வீடு புகுந்து பெண்ணைத் தாக்கியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

கண்டோன்மென்ட் பகுதியைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ் மனைவி ராஜபிரியா (31). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ராகப்பிரியாவுக்கும் இடையே குப்பை போடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே சனிக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அடையாளம் தெரியாத 15 போ் ராஜபிரியாவுக்கு வீட்டுக்குள் புகுந்து பொருள்களை சூறையாடியனா். மேலும் ராஜபிரியாவின் மாமியாரைத் தாக்கி 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து சுப்பிரமணியன், ராம்குமாா், விவேக், பாலாஜி ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT