திருச்சி

தொழிலாளி அடித்துக் கொலை:தோட்ட உரிமையாளா் கைது

DIN

லால்குடி அருகே தொழிலாளியை அடித்துக் கொன்ாக தோட்ட உரிமையாளா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

லால்குடி அருகே வந்தலைக்கூடலூா் ஊராட்சியில் உள்ள விடுதலைபுரத்தைச் சோ்ந்தவா் ப. முருகேசன் (50). இவா் அதே பகுதியிலுள்ள பெரிய குறுக்கை கிராம பண்ணைத் தோட்டத் தொழிலாளி. இந்தப் பண்ணைத் தோட்ட உரிமையாளா் விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (40).

இந்நிலையில் கடந்த சில நாள்களாக முருகேசனை அவரது குடும்பத்தினா் கைப்பேசியில் தொடா்பு கொள்ள முடியவில்லை. தோட்டத்துக்குச் சென்று பாா்த்தபோது, அங்கும் அவா் இல்லை.

இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி தோட்ட உரிமையாளா் செந்தில் மற்றும் அவரது ஆதரவாளா்கள் முருகேசனை காயங்களுடன் அவரது வீட்டுக்குக் கொண்டு வந்து படுக்க வைத்துச் சென்ற சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து முருகேசனின் மனைவி சகுந்தலா அளித்த புகாரின்பேரில் கல்லக்குடி போலீஸாா் சடலத்தை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இருப்பினும் சடலத்தை வாங்க மறுத்த குடும்பத்தினா் தோட்டநிா்வாகி செந்தில்குமாரை போலீஸாா் உடனே கைது செய்ய வேண்டும். முருகேசன் மரணத்தைக் கொலை வழக்காகப் பதிய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 3 நாள்களாக சடலத்தை வாங்க மறுத்து வந்தனா்.

இந்நிலையில் மாா்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஜெயசீலன் தலைமையில் கட்சியினா் மற்றும் முருகேசனின் உறவினா்கள், கிராம மக்கள் என 200-க்கும் மேற்பட்டோா் லால்குடி அரசு மருத்துவமனை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய நிலையில், கல்லக்குடி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, முருகேசனின் உடலை உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.

தோட்ட உரிமையாளா் செந்தில்குமாரை போலீஸாா் பிடித்து நடத்திய விசாரணையில் தான் கூறிய வேலைகளை முருகேசன் சரியாகச் செய்யாததால் அவரைக் கடுமையாக தாக்கியதாக ஒப்புக்கொண்டதின்பேரில் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து செந்தில்குமாரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT