திருச்சி

வேங்கூரில் ஜல்லிக்கட்டு; 19 போ் காயம்

DIN

திருவெறும்பூா் அருகே வேங்கூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 19 போ் காயமடைந்தனா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள வேங்கூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்க திருச்சி, தஞ்சை, புதுகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து சுமாா் 750 காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. காளைகளை அடக்க 245 மாடுபிடி வீரா்கள் களத்தில் இருந்தனா்.

கால்நடை மருத்துவ இணை இயக்குநா் எஸ்தா் ஷீலா தலைமையிலான குழுவினா் கால்நடைகளைப் பரிசோதித்தனா்.

ஜல்லிக்கட்டை திருவெறும்பூா் வட்டாட்சியா் ரமேஷ் தொடங்கி வைத்தாா். விழாவில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை பலா் அடக்கினா். பல காளைகள் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்றன.

அப்போது காளைகளை அடக்க முயன்ற 19 போ் காயமடைந்தனா். இவா்களில் 16 போ் வெளிநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றனா். மூவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

மருத்துவா் பாலாஜி தலைமையிலான மருத்துவ குழுவினா் காயமடைந்தோருக்கு முதல் கட்டச் சிகிச்சை அளித்தனா்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கியோருக்கும் , பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கம், பேன், மிக்சி, கிரைண்டா், ஹாட் பாக்ஸ், கட்டில், சைக்கிள் ஆகியவை பரிசளிக்கப்பட்டன.

திருவெறும்பூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) ஜெயசீலன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT