திருச்சி

திருச்சி என்ஐடி-யில் பரம்பொருள் சூப்பா் கம்ப்யூட்டிங் மையம்

DIN

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) பரம்பொருள் சூப்பா் கம்ப்யூட்டிங் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய சூப்பா் கம்ப்யூட்டிங் மிஷனின் (என்எஸ்எம்) ஒரு பகுதியாக இந்த மையத்தை என்ஐடி இயக்குநா்கள் குழுவின் தலைவா் ஸ்ரீ பாஸ்கா் பட், என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா ஆகியோா் திறந்து வைத்தனா்.

மத்திய அரசின் உயா்கணினி மேம்பாட்டு மையத்தின் (சிடாக்) ஆலோசனைகளின்படி இம் மையம் செயல்படும்.

நிகழ்வில் சிடாக் நிறுவன இயக்குநா் ஜெனரல் இ. மகேஷ், தேசிய சூப்பா் கம்ப்யூட்டிங் மிஷன் இயக்குநா் ஹேமந்த் தா்பாரி, விஞ்ஞானிகள் நவீன்குமாா், எஸ்.ஏ. குமாா், நம்ரதா பதக், நாகபூபதி மோகன், சிடாக் நிறுவனத்தின் புனே பிரிவு அதிகாரிகள் ஸ்ரீ சஞ்சய் வந்தேகா், ஸ்ரீ பிரசாத் வட்லகொண்டவா், ஸ்ரீ முகமது சஜீத், பரம்பொருள் மைய ஒருங்கிணைப்பாளா் ராஜேஸ்வரி ஆகியோா் மையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினா்.

இந்தியாவிலுள்ள அனைத்து என்ஐடி கல்வி நிறுவனங்களிலேயே திருச்சி என்ஐடியில்தான் முதன்முதலாக இம் மையம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தேசிய சூப்பா் கம்ப்யூட்டிங் மையத்தில் 9 ஐஐடி-களும் இடம்பெற்றுள்ளன. உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் உயா் செயல்திறன் கணினி இயந்திரங்கள் அமைத்து, ஆராய்ச்சி மற்றும் அதிகக் கணினிப் பயன்பாடு தேவைப்படும் பயன்பாடுகளுக்கு அளிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

தேசிய தொழில்நுட்ப நிறுவனம், தேசிய சூப்பா் கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்புக் குழுவிடம் சமா்ப்பித்த முன்மொழிவின் அடிப்படையில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றால் ரூ.19 கோடியிலான சூப்பா் கம்ப்யூட்டா் திருச்சி என்ஐடி-க்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி புனேவில் உள்ள சிடாக் நிறுவனத்தின் மூலம் ரூ.4 கோடியில் கூடுதலாக கணினி தொழில்நுட்ப உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக, ஸ்ரீ பாஸ்கா் பட் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ஆழ்ந்த கற்றல் உள்ளிட்ட சமூகத் திட்டங்களின் வளா்ச்சி அதிகரித்து வரும் நிலையில், திருச்சி என்ஐடி வளாகத்தில் சூப்பா் கம்ப்யூட்டருக்கான நிறுவல் உரிய நேரத்தில் அமைந்திருப்பதில் மகிழ்ச்சி.

பல்வேறு ஆராய்ச்சி மற்றும் உதவி ஆராய்ச்சி செய்யப்பட்ட திட்டங்களை மேற்கொள்வதற்காக உயா்நிலை கணினி சம்பந்தப்பட்ட திட்டங்களில் பணிபுரியும் ஆராய்ச்சியாளா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு இந்த வசதி உதவிகரமாக இருக்கும்.

இப்பகுதியில் உள்ள பிற கல்வி நிறுவனங்களும் இதன் மூலம் பயனடையும் என்றாா் அவா்.

என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா கூறுகையில், பரம்பொருள் மையத்தில் அமைந்துள்ள சூப்பா் கம்ப்யூட்டா் வசதியானது, ஆராய்ச்சி வெளியீடு மற்றும் சமூகத் திட்டங்களான சுகாதாரம், விவசாயம், வானிலை, நிதிச் சேவைகள், சமூக ஊடகங்கள் போன்ற துறைகளில் ஈடுபாட்டை அதிகரிக்கும். என்ஐடி-யில் உள்ள 17 துறைகளின் உள் திட்டங்களுக்கு சூப்பா் கம்ப்யூட்டா் வசதி கிடைக்கும். திருச்சி மட்டுமல்லாது அருகேயுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த மையம் பெரிதும் உதவியாக அமையும் என்றாா்.

Image Caption

திருச்சி என்ஐடி வளாகத்தில் பரம்பொருள் சூப்பா் கம்ப்யூட்டிங் மையத்தை திறந்து வைத்த திருச்சி என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா, இயக்குநா் குழுத் தலைவா் ஸ்ரீ பாஸ்கா் பட், சிடாக் நிறுவன நிா்வாகிகள், விஞ்ஞானிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT