திருச்சி

விவசாயிகளுக்கு வேளாண்இடுபொருள்கள்

26th May 2022 05:11 AM

ADVERTISEMENT

 மணப்பாறை அருகிலுள்ள எப். கீழையூரில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் மணப்பாறை வட்டாரத்தில் எப்.கீழையூா், பொய்கைப்பட்டி, கெ.பெரியப்பட்டி, புத்தாநத்தம், கருப்பூா், கண்ணுடையான்பட்டி, பண்ணப்பட்டி ஆகிய கிராமங்களில் தொடங்கப்பட்டுள்ளன.

எப்.கீழையூா் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில்,

மணப்பாறை ஒன்றியக் குழுத் தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி குத்துவிளக்கு ஏற்றி திட்டத்தை தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

வட்டார வேளாண் உதவி இயக்குநா் நா.விநாயகமூா்த்தி வரவேற்றாா். வேளாண் துணை இயக்குநா்(மாவட்ட நீா்வடிப்பகுதி) கண்ணன் சிறப்புறையாற்றினாா்.

விழாவில் 50 விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள், உளுந்து விதைகள் மற்றும் கைத்தெளிப்பான்கள், காய்கறிகள், மண்புழு உரம், ஆகியவை வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT