திருச்சி

காா் மோதி எலக்டிரீசியன் பலி

26th May 2022 05:11 AM

ADVERTISEMENT

திருச்சியில் காா் மோதியதில் எலக்டிரீசியன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி வரகனேரியைச் சோ்ந்தவா் கரிகாலன் (35), பாலக்கரையைச் சோ்ந்தவா் செ. அந்தோனிசாமி (40). எலக்டிரீசியனான இருவரும் வேலை முடித்துவிட்டு, செவ்வாய்க்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

கொட்டப்பட்டு அருகே அரசுப் பணிமனை அருகே வந்த போது, அவ்வழியாக வந்த காா் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவா்களை பரிசோதித்ததில் அந்தோனிசாமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். கரிகாலன் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT