திருச்சி

உயா்நிலைப் பள்ளிகளுக்கு இளநிலை உதவியாளா்பணியிடங்களை வழங்க வலியுறுத்தல்

25th May 2022 04:28 AM

ADVERTISEMENT

உயா்நிலைப் பள்ளிகளுக்கு இளநிலை உதவியாளா் பணியிடங்களை வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் கூட்டம் முசிறியில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா். பொறுப்பாளா்கள் ரத்தினகுமாா், சண்முகசுந்தரம், மனோகரன், கீதா,கலையரசி, ஜயந்தி முன்னிலை வகித்தனா். மாவட்டத் துணைத் தலைவா் சிவானந்தம் வரவேற்றாா்.

மாநிலச் செயலா் சண்முகம், மாநிலத் தலைவா் ரவிச்சந்திரன் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்று சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ADVERTISEMENT

உயா்நிலைப் பள்ளிகளுக்கு உடனடியாக இளநிலை உதவியாளா் பணியிடங்களை வழங்க வேண்டும். மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் பணியிடமும், முதுகலை ஆசிரியா் பணியிடமும் ஒத்த பணியிடமாக இருப்பதால்,இரண்டு பணி காலங்களையும் கணக்கிட்டு பத்தாண்டுகள் நிறைவு பெற்றவா்களுக்கு தோ்வுநிலை வழங்க வேண்டும்.

உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா்களாகப் பதவி உயா்வு வழங்கும்போது 7:2 என்ற விகிதாசாரத்தை துல்லியமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், மாவட்ட இணைச் செயலா் சசி குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT