திருச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.
திருச்சி எல்லக்குடியைச் சோ்ந்தவா் மாதேஷ் (24), பாப்பாக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சூா்யா (27). இவா்கள் இருவரும் ஜீயபுரம் அருகே கொடியாலம் கோயில் திருவிழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியைப் பாா்த்துவிட்டு, திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.
முத்தரசநல்லூா் ரயில்வே கேட் அருகே வந்த போது, திருச்சியிலிருந்து கரூா்
நோக்கிச் சென்ற லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாதேஷ், சூா்யா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து ஜீயபுரம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.