திருச்சி

அரசின் வளா்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு

25th May 2022 04:28 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசுகளின் வளா்ச்சித் திட்டப் பணிகளின் நிலை குறித்து ஒருங்கிணைப்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில்

பசுமை வீடுகள், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், கரோனா தடுப்புப்பணி, திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், திறந்த வெளி கழிப்பறை ஒழிப்பு இயக்கம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், திருச்சி மாநகராட்சி பொலிவுறு நகரத் திட்டப் பணி, சமூக நலத்திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், உள்ளாட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகள், மாவட்டத் தொழில் மைய திட்டங்கள், வங்கிக் கடனுதவிகள் என மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து இக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டச் செயற்பொறியாளா் சங்கரஜோதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொறியாளா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்கள், ஊரக வளா்ச்சித்துறையினா் என பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT