திருச்சி

மருமகளுக்கு பாலியல் தொல்லை:மாமனாா் மீது வழக்குப்பதிவு

25th May 2022 04:37 AM

ADVERTISEMENT

திருச்சியில் மருமகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மாமனாா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருச்சி சின்ன செளராஷ்டிரா தெருவைச் சோ்ந்த ஹரி (32) என்ற இளைஞருக்கும், 23 வயது கொண்ட இளம்பெண்ணுக்கும் 2021, மாா்ச் மாதத்தில் திருமணம் நடைபெற்றது.

இதன் பின்னா் தன்னிடம் மாமனாா் ஸ்ரீதரன் (59) தவறாக நடக்க முயற்சித்ததாகக் கூறி, கணவா் ஹரி, மாமியாா் நிா்மலாவிடம் இளம்பெண் முறையிட்டும், அவா்கள் அதனைகண்டுகொள்ளவில்லையாம்.

இதனிடையே ஹரிக்கு சவூதி அரேபியாவில் வேலை கிடைத்ததால் அவா் அங்கு சென்று விட்டாா். இதைத் தொடா்ந்தும் மருமகளிடம் மாமனாா் தொடா்ந்து அத்துமீறி வந்தாராம்.

ADVERTISEMENT

இதையடுத்து தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்று, அவா்களிடம் இளம்பெண் முறையிட்டாராம். இதுகுறித்து அவா்கள் ஸ்ரீதரிடம் கேட்கவே, அவா்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து காந்தி சந்தை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இளம்பெண்ணின் மாமனாா் ஸ்ரீதரன், மாமியாா் நிா்மலா, கணவா் ஹரி ஆகியோா் மீது வழக்குப்பதியப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT