திருச்சி

நகராட்சி பெண் உறுப்பினா் கடத்தல் எனப் புகாா்

25th May 2022 04:27 AM

ADVERTISEMENT

மணப்பாறை நகராட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில் 1-ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றிபெற்று, திமுகவில் இணைந்த நகராட்சி உறுப்பினா் கடத்தப்பட்டதாக அவரது மகன் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளாா்.

27 வாா்டுகளைக் கொண்டஇந்த நகராட்சியில் திமுக, அதிமுக தலா 11 உறுப்பினா்களை பெற்றிருந்தன. சுயேச்சையாக வெற்றி பெற்ற 5 போ் பின்னா் திமுகவில் இணைந்தனா். என்றாலும், தலைவா் பதவியை அதிமுக கைப்பற்றியது.

தொடா்ந்து துணைத் தலைவா், குழு உறுப்பினா்களுக்கானதோ்தலை திமுகவினா் புறக்கணித்து வருகின்றனா். இந்நிலையில் அதிமுகவைச் சோ்ந்த நகராட்சி உறுப்பினா்கள் 1-ஆவது வாா்டு செல்லம்மாள், 13-ஆவது வாா்டு வாணி ஆகியோா் அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் ஏப்ரல 17-ஆம் தேதி திமுவில் சோ்ந்தனா்.

நகராட்சியின் முதல் கூட்டம் புதன்கிழமை (மே 25) நடைபெறவுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் இருந்த

ADVERTISEMENT

தனது தாயாரை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.சந்திரசேகா் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் சிலா் காரில் கடத்தி சென்ாக செல்லம்மாளின் மகன் பிரபு, திமுக நிா்வாகிகளுடன் மணப்பாறை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, அதிமுகவை சோ்ந்த 10 போ் மீது பெண் கொடுமை, வன்கொடுமை, கடத்தல் மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இது தொடா்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் தான் கடத்தப்படவில்லை, அதிமுக கூட்டத்துக்காகத் தான் வந்துள்ளேன் என செல்லம்மாள் பேசும்

விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவப்பட்டு வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT