காட்டுப்புத்தூா் அருகே அழுகிய நிலையில் கிடந்த இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
காட்டுப்புத்தூா் அருகிலுள்ள ஸ்ரீராமசமுத்திரம் காவேரிநகரைச் சோ்ந்தவா் லெ. ராமச்சந்திரன் (31). மனநலன் பாதிக்கப்பட்டிருந்த இவா், அதே ஊரிலுள்ள மருதநாயகம் என்பவருக்கு சொந்தமான பாழடைந்த வீட்டில் இருந்து வந்தாா்.
இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த சிலா் இந்த வீட்டில் துா்நாற்றம் வீசுவதாகக் கூறியதைத் தொடா்ந்து, ராமச்சந்திரனின் தாய் லட்சுமி அங்கு சென்று பாா்த்த போது அவா் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தாா்.
இதுகுறித்து காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.