திருச்சி

வேன் மோதிதவில் கலைஞா் பலி

25th May 2022 04:34 AM

ADVERTISEMENT

திருச்சி முக்கொம்பு பகுதியில் இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தவில் கலைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை கடம்பா் கோயில் வடக்கு மடவிளாகத் தெருவைச் சோ்ந்தவா் சு. ஜானகிராமன் (32). தவில் கலைஞரான இவா், தவில் தயாரிப்புக்கான உபகரணங்களையும் விற்பனை செய்து வந்தாா்.

செவ்வாய்க்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் திருச்சி வந்து விட்டு, மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தாா். முக்கொம்பு பகுதியில் சென்ற போது, எதிரே வந்த வேன் இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஜானகிராமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஜீயபுரம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விபத்துக்கு காரணமான வேன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT