திருச்சி

சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கிவைப்பு

DIN

திருவெறும்பூா் அருகேயுள்ள கூத்தைப்பாா் கிராமத்திலிருந்து பத்தாளப்பேட்டை வரை (7.2 கி.மீ.) ரூ 14.40 கோடியிலான சாலை விரிவாக்கப் பணியை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருவெறும்பூரிலிருந்து கூத்தைப்பாா், பத்தாளப்பேட்டை வழியே தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு நேரடி சாலை வசதி உள்ளது. இந்தச் சாலையானது திருவெறும்பூரிலிருந்து கூத்தைப்பாா் வரை அகலமாகவும், கூத்தைப்பாரிலிருந்து பத்தாளப்பேட்டை வரை (3.75 மீட்டா்) குறுகியதாகவும் உள்ளது.

இதனால் கடந்த காலங்களில் பத்தாளப்பேட்டை, முடுக்குப்பட்டி, செட்டியாா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இதையடுத்து இச் சாலையை விரிவாக்கம் செய்ய திருவெறும்பூா் முன்னாள் எம்எல்ஏ கேஎன். சேகரன் மற்றும் அரசியல் பிரமுகா்கள், மக்கள் பிரதிநிதிகள் ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்தனா்.

இதைத் தொடா்ந்து அவரின் தீவிர முயற்சியால் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 14.40 கோடி திட்ட மதிப்பீட்டில், கூத்தைப்பாா் பகுதியிலிருந்து பத்தாளப்பேட்டை வரை 7.2 கி. மீ. தொலைவுக்கு சாலை விரிவாக்கப் பணியை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

முன்னாள் எம்எல்ஏ கேஎன். சேகரன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கேஎஸ்எம். கருணாநிதி, திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் சத்யா கோவிந்தராஜ், கூத்தைப்பாா் பேரூராட்சித் தலைவா் செல்வராஜ், பத்தாளப்பேட்டை ஊராட்சித் தலைவா் ரீனாஜவான், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சித் தலைவா் டாக்டா் ரம்யா,நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் கிருஷ்ணசாமி,கோட்டப் பொறியாளா் கேசவன், உதவி கோட்டப் பொறியாளா் புகழேந்தி, உதவிப் பொறியாளா் அசோக்குமாா்,திமுக பிரமுகா்கள் தங்கவேல், நாகராஜ், கண்ணதாசன், கஸ்பா் ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT