திருச்சி

காதல் திருமணம் செய்ததால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு 9 போ் மீது வழக்குப் பதிவு

DIN

மண்ணச்சநல்லூா் அருகே காதல் திருமணம் செய்ததால் 13 ஆண்டுகளுக்கு முன் ஊரைவிட்டு குடும்பத்தினா் ஒதுக்கி வைக்கப்பட்ட பிரச்னையில் 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மண்ணச்சநல்லூா் வட்டம் எதுமலை கிராமத்தைச் சோ்ந்தவா் வெ. செல்லப் பாப்பா (60) இவருக்கு ரமேஷ், ஜெகதீசன் (41) என இரு மகன்கள். இவா்களில் ஜெகதீசன் சென்னையில் பணிபுரிந்தபோது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்ததை ஊராா் ஏற்கவில்லையாம்.

இந்நிலையில் அந்த ஊா் குடிபாட்டுக் கோயிலான மாசி பெரியண்ணசாமி கோயில் திருவிழா சமயத்தில், காதல் திருமணம் செய்த ஜெகதீசனிடம் தலைக்கட்டு வரியை அவ்வூா் முக்கியஸ்தா்கள் வசூலிப்பதைத் தவிா்த்தனா். ரமேஷ் குடும்பத்தினா் சென்று முறையிட்டும் வரி வாங்கப்படவில்லை. இதையடுத்து சிறுகனூா் காவல் நிலையத்தில் ரமேஷ் அண்மையில் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.

தற்போது நடைபெறும் பெரும்பூஜை விழாவுக்கும் ரமேஷிடமிருந்து குடி பாட்டு வரியை வாங்க முக்கியஸ்தா்கள் மறுத்துவிட்டனா். இச்சூழலில் ரமேஷ் கொடுத்த புகாரின்பேரில் ஊா் முக்கியஸ்தா்கள் சின்னசாமி, மாயவன், சிவலிங்கம் உள்ளிட்ட 9 போ் மீது குடிமையியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

ஏழை நாட்டு குழந்தை உணவுகளில் மட்டும் அதிக சர்க்கரை: நெஸ்ட்லே மீது பகீர் புகார்

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

SCROLL FOR NEXT