திருச்சி

பள்ளியில் நிழற்குடை திறப்பு

20th May 2022 01:46 AM

ADVERTISEMENT

திருச்சி எடமலைப்பட்டிபுதூரிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கான நிழற்குடை செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இப்பள்ளி மாணவ, மாணவிகளின் வசதிக்காக, திருச்சி ராந மருத்துவமனையின் தலைமை இருதயச் சிகிச்சை நிபுணா் செந்தில்குமாா் நல்லுசாமி ரூ.50 ஆயிரம், பிறா் அளித்த தொகை என மொத்தம் ரூ.1.10 லட்சத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டு திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் மருத்துவா் செந்தில்குமாா் நல்லுசாமி நிழற்குடையைத் திறந்து வைத்தாா்.

பள்ளித் தலைமையாசிரியை ஹ. புஷ்பலதா, உதவித் தலைமையாசிரியை ராஜஷீலா மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT