திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் சமையல் உதவியாளராகப் பணியாற்றிய 25 பேருக்கு சமையலா் பதவி உயா்வு ஆணைகளை வியாழக்கிழமை வழங்கி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டினாா்.
திருவெறும்பூா் எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணைகளை வழங்கி அமைச்சா் பேசுகையில், மாணவா்களின் பசியைப் போக்கும் பணியை மேற்கொள்வது பாராட்டுக்குரியது. மதிய உணவுடன் இனி தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டியும் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். எனவே, சத்துணவு மைய பணியாளா்கள் மேலும் சிறப்பாகப் பணிபுரிந்து திமுக அரசுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சத்யா கோவிந்தராஜ், ஒன்றிய துணைத் தலைவா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ADVERTISEMENT