டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தோ்வுகளுக்கான இலவ பயிற்சி முகாம் திருச்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 22) நடைபெறவுள்ளது.
கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி தனியாா் தமிழ் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து கோவை, சேலத்தை தொடா்ந்து திருச்சியில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. முகாமில் போட்டித் தோ்வுகளுக்கான வழிகாட்டி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். அரசு அதிகாரிகள், போட்டித் தோ்வில் அனுபவம் மிக்க வல்லுநா்கள் ஆலோசனைகள் வழங்கவுள்ளனா்.
திருச்சியில் கருமண்டபம், எல்ஐசி அலுவலகம் எதிரேயுள்ள தேசியக் கல்லூரியில் வரும் காலை 9 மணிக்கு தொடங்கும் முகாமில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், வருமான வரித்துறை கூடுதல் ஆணையா் நந்தகுமாா், கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் நிா்வாக இயக்குநா் சத்ய ஸ்ரீ பூமிநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றவுள்ளனா்.
முகாமில் பங்கேற்கும் மாணவா்களுக்கு பாடத் திட்டம் மற்றும் கடந்தாண்டு கேட்கப்பட்ட வினாத் தொகுப்புகள் அடங்கிய கையேடுகள் வழங்கப்படும். பங்கேற்க 94442-27273 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.