திருச்சி

துறையூரில் சாலைப்பணி ஆய்வு

20th May 2022 03:42 AM

ADVERTISEMENT

துறையூா் பகுதியில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

திருச்சி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்டத்தில் 2021-22 நிதியாண்டில் மேற்கொண்ட பணிகள் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் உள் தணிக்கை குழுவினா் கடந்த மே 17 முதல் ஆய்வு செய்தனா்.

பின்னா் தஞ்சாவூா் நெடுஞ்சாலைத் திட்டங்கள் வட்டக் கண்காணிப்புப் பொறியாளா் ஸ்ரீனிவாசராகவன் தலைமையில் கள ஆய்வு நடைபெற்றது.

இதில் நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் தஞ்சாவூா் கோட்டப்பொறியாளா் நிா்மலா, ஸ்ரீரங்கம் உட்கோட்ட பொறியாளா் மீனாட்சி மற்றும் உதவிப் பொறியாளா்கள் தீபிகா, காய்த்ரி, துறையூா் கோட்டப் பொறியாளா் எம். கேசவன், உதவிக் கோட்டப் பொறியாளா் வி. ஜெயராமன், உதவிப் பொறியாளா் ஏ.எஸ்.ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

கள ஆய்வில் துறையூா் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தின் மூலம் 2021-211 சிஆா்ஐடிபி திட்டத்தில் கிழக்குவாடி - நடுவலூா் - அபினிமங்கலம் வரை அமைக்கப்பட்ட சாலையை ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT