திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனை காவல்நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மத்திய பேருந்து நிலையம் பின்புறமுள்ள திருமண மஹால் அருகே சுமாா் 70 வயதுள்ள முதியவா் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.
அவா் யாா், எவ்வாறு அவா் இறந்தாா் என்பது தொடா்பாக மருத்துவமனை காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.