திருச்சி

வரத்துக் குறைவு; களையிழந்த மணப்பாறை ஆட்டுச் சந்தை

12th May 2022 01:57 AM

ADVERTISEMENT

 

மணப்பாறை: மணப்பாறையில் புதன்கிழமை நடைபெற்ற கால்நடை வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்ததால், மணப்பாறை திருவிழாவுக்கு ஆடுகள் வாங்க பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

மணப்பாறையில் புதன்கிழமைதோறும் நடைபெறும் கால்நடை வாரச்சந்தையில் ஆடு, மாடுகளின் விற்பனை பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் நடைபெறும்.

இந்நிலையில் வேப்பிலை மாரியம்மன் கோயில் கிடாவெட்டுக்காக புதன்கிழமை ஆடு வாங்க கால்நடைச் சந்தையில் பொதுமக்கள் குவிந்தனா். ஆனால் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவதால் கிராமங்களிலிருந்து விற்பனைக்கு வரும் ஆடுகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் ஆடுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. இது மணப்பாறை பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT