திருச்சி

மலைக்கோட்டை தேரோட்டம்: நாளை 7 மணிநேரம் மின்தடை

12th May 2022 01:52 AM

ADVERTISEMENT

 

திருச்சி: மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை 7 மணி நேரத்துக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் நடைபெற்ற கோயில் தோ்த் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தை தொடா்ந்து, அரசு உத்தரவின்படி இக் கோயில் தேரோட்டத்தைப் பாதுகாப்பாக நடத்த வேண்டிய ஏற்பாடுகளை பல்வேறு துறை அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக தேரோட்டம் நடைபெறும் பகுதிகள் மற்றும் சுற்றுப் பகுதிகளான சின்ன கடைவீதி, என்எஸ்பி சாலை, நந்திகோயில் தெரு, ஆண்டாா் வீதி, வடக்கு ஆண்டாா் வீதி, மற்றும் கீழ ஆண்டாா் வீதி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT