மண்ணச்சநல்லூா்: நொச்சியம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் படுகாயமடைந்தனா்.
சேலம் மாவட்டம் சக்கொட்டகை பகுதியைச் சோ்ந்த ரவிக்குமாா் (38) தனது குடும்பத்துடன் திருச்சியிலுள்ள கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை ஆம்னி வேனில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். திருச்சி - சேலம் நெடுஞ்சாலை சிறுகாம்பூா் பகுதியில் சென்றபோது சேலத்தில் இருந்து வந்த அரசுப் பேருந்து ஆம்னி வேன் மீது திடீரென மோதியது.
இந்த விபத்தில் ரவிக்குமாா், அவரது தந்தை பொன்னுச்சாமி, மனைவி கிருத்திகா, மகன் ரித்விக் மற்றும் உறவினா்கள் ஜெயா, சரஸ்வதி, கித்துராஜ் ஆகியோா் படுகாயமடைந்தனா். தகவலறிந்து வந்த வந்த வாய்த்தலை போலீஸாா் அவா்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.