திருச்சி

துறையூா் அருகே வாகனம் மோதி அரசுக் கல்லூரிப் பேராசிரியா் பலி

8th May 2022 02:05 AM

ADVERTISEMENT

துறையூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசுக் கல்லூரிப் பேராசிரியா் உயிரிழந்தாா். மகன் காயமடைந்தாா்.

காமாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சு. பாலமுருகன் (42). மாற்றுத் திறனாளியான இவா் நாமக்கல் அரசு கல்லூரியில் பொருளாதாரத் துறை பேராசிரியா். குடும்பத்துடன் நாமக்கல்லில் இவா் வசித்த நிலையில் தனது மகன் சங்கமேஷை (9) அழைத்துக் கொண்டு காமாட்சிபுரத்தில் உள்ள தனது பெற்றோரைக் காண வெள்ளிக்கிழமை இரவு சென்றாா். காமாட்சிபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சாலையைக் கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவரும் காயமடைந்தனா். இதையடுத்து துறையூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இருவரும் திருச்சி தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். இருப்பினும் அங்கு சிகிச்சைப் பலனின்றி பாலமுருகன் சனிக்கிழமை உயிரிழந்தாா். மகன் சங்கமேஷ் சிகிச்சை பெறுகிறாா். துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT