திருச்சி

481 கிலோ கலப்படத் தேயிலை பறிமுதல்

5th May 2022 02:33 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சியில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் நடத்திய சோதனையில் 481 கிலோ கலப்படத் தேயிலை பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சியில் உள்ள டீக்கடை, பேக்கரிகளில் பயன்படுத்தப்படும் டீத் தூளில் கலப்படம் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதன்பேரில் திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது கே.கே. நகரில் உள்ள பேக்கரி மற்றும் டீக் கடையில் 6 கிலோ கலப்படத் தேயிலையும், சீதாதேவி கோயில் அருகேயுள்ள கடையொன்றில் 75 கிலோ கலப்படத் தேயிலையும், பொன்னகரில் 240 கிலோ கலப்பட தேயிலையும், எடத்தெருப் பகுதியில் 150 கிலோ கலப்படத் தேயிலையும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கலப்படத்துக்கு பயன்படுத்தப்படும் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்த 4 இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட தேயிலைத் தூள்களில் இருந்து 8 மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவுப் பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டது. தேயிலை தூள் விற்போா் கலப்படம் செய்து விற்றாலோ, சில்லறை விற்பனை கடைகளில் அத்தகைய தேயிலை தூள் இருந்தாலோ பறிமுதல் செய்யப்படும். கலப்படத் தேயிலை தொடா்பாக பொதுமக்களும் 99449-59595, 95859-59595 என்ற எண்களில் புகாா் அளிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT