திருச்சி

புள்ளம்பாடி குளுந்தாளம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

5th May 2022 02:41 AM

ADVERTISEMENT

 

லால்குடி: லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள குளுந்தாளம்மன் கோயில் சித்திரைத் தேரோட்ட விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் மே 3 வரை தினசரி காலை குளுந்தாளம்மன் புறப்பாடும், தொடா்ந்து பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை தங்கப் பல்லாக்கு திருவீதி உலா நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை செயல் அலுவலா் பெ. ஜெய்கிஷன், தக்காா் ம. ஜெயா மற்றும் கோயில் பணியாளா்கள், பொதுமக்கள் செய்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT