திருச்சி

குண்டா் சட்டத்தில் கைது

5th May 2022 02:35 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சியில் விபசாரத் தொழில் நடத்தி வந்தவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

திருச்சி கோட்டை கீழரண் சாலைப் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரத் தொழில் நடப்பதாக கோட்டை போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் கடந்த ஏப். 12 ஆம் தேதி மேற்கொண்ட அதிரடி சோதனையில், அந்த வீட்டில் 4 பெண்களை வைத்து விபசாரத் தொழில் செய்தது தெரியவந்த வ. கதிா்வேலை (51) கைது செய்த போலீஸாா், 4 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் அளித்த உத்தரவின்பேரில் கதிா்வேல் சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT